மாஸ்டருடன் மோதும் சூரரைப் போற்று.!

மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஒரே தினங்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது . 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,

மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 ம் தேதி வெளியவிருந்த இந்த படம் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில்நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யா வின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை, மேலும் இந்த திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது, இதனால் மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஒரே தினங்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது . 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.