ADMK Chief Secretary Edappadi Palanisamy

அதிமுக பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

By

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

   
   

இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மழை காரணமாக அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – ஈபிஎஸ்

இந்த நிலையில் தற்போது, தஞ்சையில் நவம்பர் 16-ல் அதிமுக நடத்தவிருந்த பொதுக்கூட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4-ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம், கனமழையால் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த முறை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023