,

விமர்சனங்களை துவம்சம் செய்து வசூலில் அதிரடி காட்டிய ‘ஆதிபுருஷ்’…முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா…?

By

Adipurush

பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படத்தை பார்த்த பலரும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை, படத்தின் ஸ்க்ரீன் பிளே சரியில்லை. படம் பொம்மை படம் போல இருக்கிறது என வெளிப்படையாகவே கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால், விமர்சனங்கள் எப்படி வந்தாலும், வசூலில் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.95 கோடியை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது. 2 நாட்களில் எதனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.