மங்களூர் விமான நிலையத்தை 50 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது அதானி குழுமம்!

மங்களூர் விமான நிலையத்தை அதானி குழுமம் 50 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்ததுள்ளது.

மத்திய அரசானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்கட்ட முயற்சியாக அகமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 6 விமானநிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பணியை செயல்படுத்தியதன் காரணமாக அதற்கான ஏலம் கடந்தாண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டு அதில் அதானி குழுமம் வெற்றிப் பெற்றது.

அதனையடுத்து, 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி அதானி குழுமத்துக்கும் ஏஏஐ-க்கும் இடையே விமானநிலையங்களை செயல்படுத்துதல், நிா்வகித்தல், மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தப்படி, அக்டோபா் 31-ஆம் தேதி மங்களூரு விமானநிலையத்தையும், நவம்பா் 2-ஆம் தேதி லக்னனோ விமானநிலையத்தையும், நவம்பா் 11-ஆம் தேதி அகமதாபாத் விமானநிலையத்தையும் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அக்டோபா் 22-ஆம் தேதி ஏஏஐ தெரிவித்திருந்தது.

அதன் முதற்கட்டமாக, மங்களூரு விமான நிலையத்தை 50ஆண்டு கால குத்தகைக்கு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏஏஐ அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.