“அடப் போங்கடா!மருத்துவர்களின் முகம் முழுவதும் எழுதப்பட்ட அந்த உதவியற்ற தன்மை என்னைக் கொல்கிறது”- அஸ்வின் ட்வீட்..!

டெல்லி பாத்ரா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.சி.எல் குப்தா பேசிய நேர்காணல் வீடியோவை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,”அடப் போங்கடா,மருத்துவர்களின் முகம் முழுவதும் எழுதப்பட்ட அந்த உதவியற்ற தன்மை என்னைக் கொல்கிறது”,என்று ட்வீட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது.

இந்த நிலையில்,டெல்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.அதில் அதே மருத்துவமனையில் இரப்பைக் குடல் அழற்சி பிரிவில் தலைவராகப் பணியாற்றிய மருத்துவர் ஆர்.கே.ஹிம்தானியும் உயிரிழந்துள்ளார்.

இதுத்தொடர்பாக நேற்று அம்மருத்துவமனை இயக்குநர் டாக்டர். எஸ்.சி.எல் குப்தா செய்தியாளர்களிடம் பேட்டியளித்ததில்,”மே 1 ஆம் தேதியன்று பாத்ரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட 30 நிமிடத்திற்குள் ஒரு மருத்துவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல்,தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளனர்.இவைகளைகளையெல்லாம் பார்க்குமோது என் உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை”,என்று கூறியுள்ளார்.

மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.சி.எல் குப்தா பேசிய இந்த நேர்காணலின் வீடியோவை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,”அடப் போங்கடா,மருத்துவர்களின் முகம் முழுவதும் எழுதப்பட்ட அந்த உதவியற்ற தன்மை என்னைக் கொல்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.