தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினி மற்றும் கமல் இருவரும் யாருக்கு ஆதரவு என்று, அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா நிச்சயமாக இந்த வருடம் நடைபெறும் என்றும், அனைத்து துறைகளை போலவே சினிமாவிலும் வெற்றி தோல்வி என்பது உள்ளது என தெரிவித்துள்ளார்.