விஷாலுக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!

விஷாலின் 32 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சக்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் தனது 31 வது படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.

அதைபோல் அடுத்ததாக நடிகர் விஷால் அடங்கமறு திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பொல்லாதவன் ஆடுகள் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே  பிரியா பவானி சங்கர் இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.