நடிகை ஹன்சிகா அதிவேக உடல் வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாக வதந்திகள் பரவிய நிலையில். அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் காட்டமாக பதிலளித்து விளக்கம் கொடுத்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஹன்சிகா “பிரபலமாக இருப்பவர்களுக்கு இதுவும் ஒரு பகுதிதான். இப்படி பரவும் வதந்திகள் எதுவும் உண்மையிலை.

நான் எதையும் மறைக்கப்போவதில்லை. ஏனென்றால் அதில் உண்மை இல்லை. இன்று வரை என்னால் ஊசி போட முடியாது. ஏனென்றால், நான் ஊசிகளைக் கண்டு பயப்படுவதால் என்னால் பச்சை கூட குத்த முடியாது. எனவே, நான் எதற்காக ஊசி போடா போகிறேன்..?

நான் ஹார்மோன் ஊசி போட்டிருந்தால், நான் டாட்டா டாடாவை விட பணக்காரராக இப்போது இருந்திருப்பேன். நாங்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் சீக்கிரமாகவே குறிப்பிட்ட சில வயதிலே வளர்ந்து விடுவார்கள். ஏனென்றால், அந்த ஜீன் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது .

மேலும், நம்மளுடைய வளர்ச்சியைக் கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது” என கூறி விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், நடிகை ஹன்சிகா தற்போது காந்தாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.