திருமண கோலத்தில் நடிகை தர்ஷா குப்தா.! வைரலாகும் புகைப்படம்.!

ருத்ரதாண்டவம்  படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிசி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். ” ருத்ரதாண்டவம்” இந்த திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிசிக்கு  ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துவருகிறார். படத்தில் நடிகர் ராதா ரவி, மளவிகா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த ஜூலை 5 ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்தது.

இந்த நிலையில், ருத்ரதாண்டவம்  படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.