மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை சாவி மித்தல் .. புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை சாவி மித்தல் அவர்கள் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காக வேண்டுதல் செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நேற்று மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தவாறுள்ள தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ள சாவி தனது அனுபவத்தை கூறியுள்ளார். அதன்படி எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்று கூறியதில் இருந்தே ரசிகர்கள் பலரும் குணமடைவதாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர்கள் பிரார்த்தனை இன்று பலன் கொடுத்துள்ளது போல் தெரிகிறது. மருத்துவர் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்பாக நல்லதை பற்றி யோசிக்க சொன்ன பொழுது நான் எனது அழகிய மார்பகங்களை குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பின்பு நான் எழுந்து பார்க்கும் பொழுது புற்றுநோய் இல்லாதவளாக எழுந்தேன். அறுவைசிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்றது. இது ஒரு பெரிய விஷயம். மேலும் என்னிடமிருந்து ஒரு மோசமான விஷயம் மறைந்து விட்டது என்று நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

உங்கள் பிரார்த்தனை எப்பொழுதும் ஆதரவாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சி. இன்னும் நான் சற்று வேதனையில் இருக்கிறேன். எனவே பிரார்த்தனையை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து எனக்காக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். மேலும் எனது அன்பான துணை இன்றி என்னால் இவ்வளவு சாதித்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Chhavi Mittal (@chhavihussein)