நிவின் பாலிக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி..?

நிவின் பாலிக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி..?

இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். 

பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நிவின் பாலி அடுத்ததாக தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ராம் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இதனால் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube