நடிகர் விவேக்கின் மறைவு வேதனையளிக்கிறது…! – நடிகர் ரஜினிகாந்த்

சின்ன கலைவாணர், சமூக சேவகர், எனது நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. 

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் அவர்கள் தான் ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சின்ன கலைவாணர், சமூக சேவகர், எனது நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.