நடிகர் விஜய் ட்வீட்! மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக புதிய எமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் மீண்டும் 50% பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டது.

இதனிடையே, மாஸ்டர் படத்தின் டீசர் ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் பிடித்ததாக அமைந்தது. பல சாதனைகளையும் படைத்தது. 2020-ஆம் ஆண்டின் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பெயரில் மாஸ்டர் தான் இடம்பிடித்தது. இதனை ட்விட்டர் இந்தியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மாஸ்டர் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னட, தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்து நேரடியாக இந்திய மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜி ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் MasterFilm என்ற ஹாஸ்டேக் பயன்படுத்தி, ட்விட்டர் இந்தியாவை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதனை ட்விட்டர் இந்தியா, புத்தாண்டு வாழ்த்துக்கள் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் ரசிகர்கள் என்று கூறி, மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜிகளுடன் விஜயின் டீவீட்டை ரீட்விட் செய்துள்ளது. உடனே ரசிகர்கள் மாஸ்டர் ஹாஸ்டேக்கை பயன்படுத்தி ட்விட் செய்து வருகின்றனர்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

1 hour ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

2 hours ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

3 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

5 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

5 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

5 hours ago