,

இன்று மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்..! மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு..!

By

vijay

நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். 

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இன்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

 அதன்படி, இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த “10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு விளம்பர படுத்தக்கூடிய பேனர், கட்அவுட் போன்றவற்றை வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.