அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் ஆண்டனி….!!!

38

விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து, தற்போது ‘அக்கினி சிறகுகள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டி.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.