,

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்க்ஸ்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…!

By

இசையால் தமிழர்களின் பெருமையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.தனது பாடல் மற்றும் இசையின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது முதல் முறையாக ’99 சாங்க்ஸ்’ படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’99 சாங்க்ஸ்’ படத்தினை இயக்குநர்.விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.மேலும்,இப்படத்தில் இஹான், மனீஷா கொய்ராலா,எடில்ஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இசையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், இன்று வெளியாகி நல்வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்களிடம் ,”இவ்வளவு நாளாக என் பாடல்கள் மற்றும் இசைக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். இப்போது நானே கதை எழுதி ’99 சாங்க்ஸ்’ படத்தைத் தயாரித்திருக்கிறேன்.ஒரு அற்புதமான குழுவுடன் இப்படம் தயாராகியுள்ளது.இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த்,”உங்களுக்கும்,உங்கள் 99 சாங்க்ஸ் படத்திற்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துக்கள்,
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்”,என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.