நடிகர் கருணாஸ் தோல்வி பயத்தால் பிதற்றுகிறார் !ஐசரி கணேஷ்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடை பெறவுள்ளது. இதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு சங்கரதாஸ் அணியிலிருந்து போட்டியிடும் ஐசரி கணேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் காமெடி நடிகரும், எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தோல்வி பயத்தில் பிதற்றுவதாக  தெரிவித்துள்ளார். மேலும் எம்.ஜி ஆர் ஜானகி கல்லூரிக்கு பதிலாக, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அல்லது கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரிகளில் நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை சம்மந்தப்பட்டவர்கள் பரிசீலிக்க வேண்டும் எனவும் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.