அதிரடி ரெய்டு….பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லி கைது ..!

நடிகர் அர்மான் கோஹ்லி தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இன்று காலை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லியின் மும்பை வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நேற்று சோதனை நடத்தியது. இதனையடுத்து, நடிகர் அர்மான் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,என்சிபி எழுப்பிய கேள்விகளுக்கு அர்மான் தெளிவற்ற பதில்களை அளித்ததாகவும்,இந்த விசாரணை 12 மணி நேரம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்,அவரது மும்பை வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு சட்டம் s 21 (a), 21 (a), 28, 29, 30,ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று காலை நடிகர் அர்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த போதைப்பொருள் விற்பனையாளரான அஜய் ராஜு சிங்கை, போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் கைது செய்து நேற்று விசாரணை நடத்தினர். அதன் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் என்சிபியின் அதிகாரிகள் மும்பை,அந்தேரியில் உள்ள நடிகர் அர்மன் கோஹ்லியின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது மற்றும் அவரிடமிருந்து சில போதைப்பொருளை மீட்டநிலையில்,தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக,நடிகர் அர்மான் 2018 ஆம் ஆண்டில் மதுப் பொருட்கள் அவரது வீட்டில் வைத்திருந்ததற்காக கலால் துறையால் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது.மேலும்,இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்ஹான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

12 mins ago

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…

17 mins ago

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…

18 mins ago

சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…

25 mins ago

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

45 mins ago

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

1 hour ago