12ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் குறித்து நடவடிக்கை., சொந்த செலவில் மைதானம் – ஓபிஎஸ்

12ம் வகுப்புக்கு பாஸ் போடுமாறு துணை முதல்வரிடம் கேட்ட மாணவர்கள், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என பதில்.

போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்கு கூடி இருந்த பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பையும் ஆள் பாஸ் போட்டுவிடுங்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த துணை முதல்வர், தமிழக முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி உற்சாகத்தில் கைதட்டினர். மேலும், மாணவர்கள் தங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்குமாறு கேட்டதற்கு, உரிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது சொந்த செலவில் மைதானம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார். இதனிடையே, 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்