ஆக்ஷன் கிங் அர்ஜூனின் பிறந்தநாள் பரிசு.! ‘பிரண்ஷிப்’ படக்குழுவினர் வெளியிட்ட செம மாஸ் வீடியோ.!

அர்ஜுன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து மிரட்டலான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது 56வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவர் வில்லனாக நடிக்கும் படமான பிரண்ஷிப் படத்தில் இருந்து பிறந்தநாள் ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர்.சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் டி. எம். உதயகுமார் இசையமைத்துள்ளார். தற்போது அர்ஜுன் அவர்களின் சண்டை காட்சியை பிறந்தநாளின் ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்டு தற்போது அந்த மிரட்டலான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.