குரங்குகளுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை! வனத்துறை எச்சரிப்பு!

குரங்குகளுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை! வனத்துறை எச்சரிப்பு!

வால்பாறையில் சிங்கவால் குரங்குகளுடன் இணைந்து செல்பி எடுக்க தடை. 

உலக அளவில் மிக குறைந்த அளவே வாழும் சிங்க வால் குரங்கானது, வால்பாறை பகுதியில் அதிக அளவில் வாழ்கிறது. இந்த குரங்கானது சிங்கமுக தோற்றத்துடன் காணப்படுவதால், இதற்கு சிங்கவால் குரங்கு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாத்தலமான வால்ப்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த சிங்கவால் குரங்குகளுடன் இணைத்து புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த குரங்குகளுக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை இனப்பெருக்க காலம் என்பதால், இந்த குரங்குகளுடன் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube