அரசு ஊழியர்கள் 2-வது  திருமணம் செய்தால் ஒழுங்குநடவடிக்கை – தமிழக அரசு முக்கிய உத்தரவு!

அரசு ஊழியர்கள் 2-வது  திருமணம் செய்தால் ஒழுங்குநடவடிக்கை – தமிழக அரசு முக்கிய உத்தரவு!

அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் இரண்டாவது திருமணம் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,இதனை மீறி 2-வது  திருமணம் புரிவோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்,அவர்கள் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும்,தமிழக அரசின் அரசுப்பணியாளர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களாவர்.

எனவே,கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டனைச் சட்டம் 494 ஆம் பிரிவின்படி செல்திறனற்றதாவதுடன்,அவர்கள் தண்டணைக்குட்பட்டவர்கள்.எனவே,அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெர்வித்துள்ளது.

Join our channel google news Youtube