இளைஞர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட கவிஞர் வைரமுத்துவின் அதிரடி செயல்!

கவிஞர் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 7 முறை தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், அவர் வெளிநாடு சென்ற பொது இளைஞர்களின் வாசிப்பு திறன் குறைந்ததையும், அதிகமாக கேட்கும் திறன் வளர்ந்துள்ளதாகவும் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இளைய சமுதாயத்தினர், நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால், ஒலி வடிவத்தில், ‘தமிழாற்று படை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தமிழுக்கு வெற்றிடம் இருந்தால், அதை தமிழாற்றுப்படை நிறைவு செய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஜூலை 12-ம் தேதி நடைபெறும் விழாவில், தமிழாற்று படையின் புத்தக வடிவத்தை திமுக தலைவர் ஸ்டாலினும், இசைத்தட்டு வடிவத்தை வைகோவும் வெளியியிடவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.