#Breaking:உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் கனமழை – வானிலை மையம்!

#Breaking:உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் கனமழை – வானிலை மையம்!

வங்கக்கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று  வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே,இன்று கன்னியாக்குமரி,திருநெல்வேலி,விருதுநகர், தென்காசி தேனி,திண்டுக்கல்,மதுரை,நீலகிரி,கோவை,திருப்பூர்,கரூர், நாமக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,வேலூர்,திருப்பதூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube