தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இடி மின்னலுடன் கனமழை தொடரும் எனவும், சென்னை உட்பட, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.