,
India ‘A’ beat Bangladesh A

மகளிர் டி20 எமெர்ஜிங் ஆசிய கோப்பை..! 31 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

By

இந்தியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஏசிசி மகளிர் டி20 எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 பட்டத்தை வென்றது

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான ஏசிசி மகளிர் டி20 எமெர்ஜிங் ஆசிய கோப்பை ஆசிய கோப்பை இறுதிப்போட்டியானது மோங் கோக்கில் உள்ள மிஷின் சாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய ஏ பெண்கள் அணி 20 ஓவர்களில் 127 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 128 ரன்கள் என்ற இலக்குடன் பங்களாதேஷ் ஏ பெண்கள் அணியில் ஷாதி ராணா, திலாரா அக்டர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இருவரும் பெரிதாக ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் சோபனா மோஸ்தரி மற்றும் லதா மோண்டல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பங்களாதேஷ் அணியின் வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்.

இறுதியில் பங்களாதேஷ் ஏ மகளிர் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த நிலையில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா ஏ மகளிர் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகளும், மன்னத் காஷ்யப் 3 விக்கெட்டுகளும், கனிகா அஹுஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

Dinasuvadu Media @2023