தந்தை இறந்த இரண்டு வாரத்தில் மகனால் தாய்க்கு நடந்த கொடுமை..!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது கணவர் பாலகிருஷ்ணன்.

By murugan | Published: Oct 11, 2019 08:45 AM

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது கணவர் பாலகிருஷ்ணன். இரண்டு வாரங்களுக்கு பாலகிருஷ்ணன் முன் இறந்துள்ளார். இதனால் சரஸ்வதி தன்னுடைய மகனான எத்திராஜ் உடன் வசித்து வந்தார். எத்திராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி எத்திராஜை விட்டு பிரிந்து சென்று விட்டார். கணவர் இறந்த நிலையில் சரஸ்வதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த எத்திராஜ் நாம் இருவரும் வாழ வேண்டாம் என தற்கொலை செய்து கொள்ளலாம் என தாயிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எத்திராஜ்  தாய் சரஸ்வதியின் கழுத்தை அறுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள கத்தியால் வயிற்றில் குத்திக் கொண்டார் எத்திராஜ். ஆனால் கத்தி வயிற்றில் சிக்கிக்கொண்டதால் எத்திராஜ் அலறி துடித்தார்.  சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சரஸ்வதி இறந்து கிடந்தார். எத்திராஜ் வயிற்றில் கத்தி சொருகி துடிதுடித்து கத்தியுள்ளார். இதை பார்த்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எத்திராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc