கொரோனாவிலிருந்து மீண்ட அபிஷேக் பச்சன் - நன்றி தெரிவித்து அவரே வெளியிட்டுள்ள பதிவு!

கொரோனாவிலிருந்து மீண்ட அபிஷேக் பச்சன் - நன்றி தெரிவித்து அவரே வெளியிட்டுள்ள பதிவு!

நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் நன்றி தெரிவித்தும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அது போல இந்திய திரையுலகின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை  தொடர்ந்து அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் விரைவில் குணமாகி வீடு திரும்பிய நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அண்மையில் அமிதாப்பச்சனும் குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அபிஷேக் பச்சனும் கொரோனாவை வென்றுள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இன்று பிற்பகல் எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்ற பதில் வந்துள்ளது. கொரோனாவை நான் வெல்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். எனக்காகவும் என்னுடைய குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி. மேலும் என்னை கவனித்துக் கொண்ட நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்கும் பழனிசாமி - முக ஸ்டாலின் அறிக்கை.!
மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!