10.8 C
London
Sunday, October 17, 2021

இந்தியாவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம் – பிரதமர் புகழாரம்!

இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம் என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரும், பாரத ரத்னா நாயகனுமாகிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் அப்துல் கலாமின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் அன்று அவருக்கு எனது அஞ்சலி. இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் எப்பொழுதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

spot_imgspot_img

Hot Topics

Read More