இனி ஆதார் போதும் ; உடனே பான் எண் கிடைக்கும்.! கட்டணம் இலவசம்.!

ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார்

By balakaliyamoorthy | Published: May 29, 2020 03:06 PM

ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்கும் வசதி, பரிசோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில், இதுவரை 6,77,680 பான் எண்கள் 10 நிமிடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.

ஆதாருக்கு விண்ணப்பம் செய்யவர்களிடம், ஆதார் எண் மற்றும் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும், ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். உடனே மின்னணு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது.

கடந்த 25 ம் தேதி வரை மொத்தம் 50.52 கோடி பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 32.17 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc