ஆதார் செல்லும்..!சிம் கார்டு பெற ,பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை ..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் நல திட்டங்கள், நிதி சார்ந்த திட்டங்கள், வங்கி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண் காட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த முக்கியத் தீர்ப்பினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

தற்போது ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டுவருகிறது.

Image result for உச்ச நீதிமன்ற

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ கே சிக்ரி தலைமை நீதிபதி உள்ளி்ட்ட 3 பேருக்கான தீர்ப்பை வாசிக்கிறார் .அதில் சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் .கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது .ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது. இது தனித்துவமானது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளது .ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார் ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது.ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கபட்டுள்ளது.இதன் மூலம்  தனியார் நிறுவனங்கள் இனி ஆதார் அட்டையை கேட்க முடியாது.சிம் கார்டு பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை .பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

Image result for ஆதார்

ஒருவரின் கையெழுத்தை கூட மாற்றலாம்.ஆனால் கைரேகையை மாற்ற முடியாது.மேலும் சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது .அரசு சலுகைகள் பெற ஆதார் கட்டாயம்.ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது.அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே மாதிரியாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.அதில் தலைமை   நீதிபதி தீபக் மிஸ்ரா,கண்வில்கர் ,ஏ கே சிக்ரி ஆவார்கள்.

Leave a Comment