இந்தியில் ரீமேக் செய்யப்படும் ஆடை.!ஆடையில்லாமல் நடிக்க தயாராகும் பாலிவுட் நடிகை.!

இந்தியில் ரீமேக் செய்யப்படும் ஆடை.!ஆடையில்லாமல் நடிக்க தயாராகும் பாலிவுட் நடிகை.!

அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரைப்படம் ஆடை. ஆடையில்லாமல் பல காட்சிகளில் நடித்து அமலாபால் அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். ஆடையில்லாமல் நடித்ததற்காக பலரது பாராட்டுகளை பெற்றாலும் படம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் அமலாபால் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.