பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்…!

பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

பெங்களூரில், ஹெப்பால் அருகே உள்ள சகரநகரில், 16 வயது இளம்பெண் தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தர பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளம்பெண்ணின் பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் மாலை வீட்டுக்கு வந்த பின் தான், தனது மகள் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

வேலையை முடித்து வீடு திருப்பிய பெற்றோர் தனது மகளை அழைத்துள்ளனர். ஆனால், அவர்களது அழைப்பிற்கு அப்பெண் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், கதவை உடைத்து கொண்டு அவரது தந்தை உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறை கூரையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்பெண்ணின் பெற்றோர், அவர் தேர்வில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட பெண் தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி கேட்டார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர் புத்தாடை வாங்கி கொடுக்கவில்லை.

மேலும், அப்பெண் அவரது தொலைதூர உறவில் உள்ள ஒரு ஆணை விரும்பியதாகவும், இதற்கு இரண்டு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் அவர் வருத்தப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.