ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பறந்து சென்ற பெண்..! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?

பெரு நாட்டிற்கு தனது ஆன்லைன் காதலனை சந்திக்க சென்ற பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு. 

மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த 51 வயதான பெண் பிளாங்கா அரேலானோ. இவர் தனது ஆனால்சின் நபரான பெரு நாட்டை சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே சந்திக்க சுமார் 5000 கி.மீ பயணித்து பெரு நாட்டிற்கு சென்றுள்ளார்.

உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 9 ஆம் தேதி ஹுவாச்சோ கடற்கரையில், முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் 51 வயதான பெண் பிளாங்கா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியில், பிளாங்கா அரேலானோ தான் ஆன்லைனில் சந்தித்த ஜுவான் பாப்லோ என்ற நபரை பற்றியும், அவரை விரைவில் நேரில் பார்ப்பதற்காக பெரு-விற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தனது உறவினரிடம் கூறியுள்ளார். இறுதியாக பிளாங்கா அரேலானோவிடம் நவம்பர் 7ம் திகதி இறுதியாக பேசியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், 51 வயதான பெண் பிளாங்கா உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment