ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது – கமலஹாசன்

சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது என கமலஹாசன் ட்வீட். 

சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவிற்கு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment