சேலத்தில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா; நிதி அமைச்சர்.!

தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில் நிதியமைச்சர், சேலத்தில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு.

சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான மின்னணு வடிவ பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.

ரூ.20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும் எனவும், விருதுநகரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment