AI தொழிநுட்பத்தால் பணத்தை இழக்கும் இந்தியர்கள்.? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களில் 83 சதவீதத்தினர் AI தொழில்நட்ப குரலால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 

தற்போது ஐடி துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு என்றால் அது செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் AI தொழில்நுட்பம் ஆகும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்புகள் போகும் நிலை ஏற்படும் என்றாலும் இந்த துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கின்றன.

எந்த அளவுக்கு நன்மை இருந்தாலும், தீமையும் அதே போல இருக்க தான் செய்யும் என்பது போல, இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் போல பேச வைத்து அதன் மூலம் பணத்தை திருடும் குற்றங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

இது குறித்து ஆய்வை, McAfee எனும் ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனம் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தியது . அதில் ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்தவர்களில் 83 சதவீத இந்தியர்கள் Al-ஆல் உருவாக்கப்பட்ட பொய்யான தொலைபேசி அழைப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும், இதில் 48% பேர் 50,000க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் எனவும், 69 சதவீதத்தினர் AIஆல் உருவாக்கப்பட்ட குரலையும், மனிதர்களின் குரலையும் அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை என கூறியதாகவும்  அதிர்ச்சி தகவல்கள் ஆய்வில் வெளியாகியுளளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.