தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை.! சட்டப்பேரவையில் அதிரடி அறிக்கை.!

2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.  இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தற்போது அதற்கான விசாரணை அறிக்கையை, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை குழு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளனர். இதில், 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு முந்தைய, பிந்தைய நிகழ்வுகள் என்ன நடந்தது, துப்பாக்கி சூட்டிற்கான உண்மையான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment