இங்க பாருங்க ! 360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியாக துபாய்க்கு பயணித்த பயணி..!

மும்பையிலிருந்து துபாய்க்கு 18,000 ரூ டிக்கெட் விலையில் 360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தன்னந்தனியாக பயணித்த பயணி.

மே 19 அன்று மும்பையிலிருந்து துபாய்க்கு போயிங் 777 ரக விமானம் புறப்பட்டுள்ளது. இதில் 40 வயதை சேர்ந்த பாவேஷ் ஜாவேரி என்பர் பயணித்துள்ளார்.

இவரது விமான பயணத்தின் டிக்கெட் விலை 18,000. ஆனால், விமானத்தில் இவர் ஒருவர் தான் பயணித்துள்ளார். மும்பை மற்றும் துபாய் விமான நிலையங்களை இணைக்கும் இந்த விமான சேவையை அதிகமானோர் பயன்படுத்துவர்.

ஆனால், தற்போது கொரோனா பரவலால் விமான சேவை பாதிப்படைந்துள்ளது. இதனால் குறைவான பயணிகள் மட்டுமே தற்போது விமானத்தை பயன்படுத்துகின்றனர்.

அதிலும் பாவேஷ் ஜாவேரி சென்ற விமானத்தில் அவர் ஒருவர் தான் பயணி என்பது அவருக்கே விமானத்தில் உள் நுழையும் போது விமான பணிப்பெண்கள் கை தட்டி வரவேற்ற பொழுது தான் தெரிந்துள்ளது.

அந்தவகையில் பாவேஷ் விமான பணிப்பெண்ணிடம்,  நான் 20 ஆண்டுகளாக விமான பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 240 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளேன். ஆனால், இதுவே எனக்கு மிகவும் சிறந்த பயணமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பணத்தால் அனுபவத்தை வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

360 இருக்கைகளில் இவர் 18 ஆவது இருக்கையை கேட்டு வாங்கி பயணித்துள்ளார். இந்த எண் இவருக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், விமான பணிப்பெண் இவரிடம், தனியாக பயணிக்க நீங்கள் பயப்படுவீர்களோ! என்று நினைத்ததாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், விமானி பாவேஷிடம் வந்து நான் உங்களுக்கு விமானத்தை சுற்றி காட்டவா என்று கேலி செய்து பேசியிருக்கிறார். அதன் பின்னர், பயணத்தின் போது அறிவிப்பை வெளியிட்டால் பயணிகளின் கவனத்திற்கு என்று கூறுவர்.  ஆனால், இந்த பயணத்தில் தொடர்ந்து விமானி மிஸ்டர் ஜாவேஷ் விமானம் தரையிறங்க போகிறது, சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் இவர் சென்ற பயணங்களிலே இதுவே சிறந்த அனுபவமாக இருந்ததாக பாவேஷ் ஜாவேரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விமானம் மும்பையிலிருந்து துபாய்க்கு செல்வதற்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருள் செலவாகியுள்ளது. இந்த விமானம் துபாயிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக இயக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது, அதனால் ஒரு பயணியும் வரவில்லை என்றால் கூட இந்த விமானம் துபாய் சென்றிருக்கும் என்று விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.