மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தகவல்.!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் ஒரேநாளில் 44செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.

மேலும் இந்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் சென்றடையும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாள்களில் கனமழை பெய்யும் எனவும் பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நவ-16இல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment