நீதிமன்ற தீர்ப்பு.! IPC-21இன் படி திருமணம்.! வைரலாகும் வழக்கறிஞரின் வித்தியாசமான அழைப்பிதழ்.!

அசாமை சேர்ந்த வழக்கறிஞர் தனது திருமண பத்திரிகையை நீதிமன்ற தீர்ப்பு போல அச்சிட்டு உள்ளார். அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில், இணையத்தில் வைரலாக பலரும் பலவிதமாக சிந்தித்து செயல்படுத்தி வருகின்றனர். அவர்கள் சிந்தித்ததில் எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்திருந்தால் உலக பணக்காரர்களின் வரிசையிலே உக்காந்திருப்பார்கள் போலும் அந்தளவுக்கு பிரபலமாக சிந்திக்கிறார்கள்.

அப்படிதான், அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞர் வித்தியாசமாக பல நாட்கள் யோசித்து அவரது திருமண பத்திரிகையை வடிவமைத்துள்ளார்.

அசாம், கௌஹாத்தியில் நடைபெறவுள்ள திருமணத்திற்க்காக ஒரு பத்திரிகையை வடிவமைத்துள்ளார். அதாவது, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு முடிந்தால், அதன் தீர்ப்பை எப்படி எழுத்துவார்களோ அதே போல, அந்த பத்திரிகையை வடிவமைத்துள்ளார்.

நீதிமன்ற தராசின் இருபக்கமும், அஜய் ஷர்மா, பூஜா ஷர்மா என தம்பதியினர் பெயரும், அதற்கு கீழே, ‘இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் திருமணம் செய்வதற்கான உரிமை என்பது வாழ்க்கை உரிமையின் ஒரு அங்கமாகும். எனவே, நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமை இந்த அடிப்படை உரிமையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.’ என ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த திருமண பத்திரிகைதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அஜய் ஷர்மா, கௌஹாத்தியில் வழக்கறிஞராக 5 வருடங்கள் பணியாற்றி வருகிறார். பூஜா ஷர்மா உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். அஜய் ஷர்மா இந்த பத்திரிகைக்காக தனது உடன் வேலை பார்ப்பவர்கள் நண்பர்கள் என பலரிடம் யோசனை கேட்டு இந்த அழைப்பிதழை உருவாகியுள்ளாராம்.