திருச்சி அருகே வங்கியில் பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளை!!!

19

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.வழக்கம்போல இன்று காலை வங்கியை திறக்க சென்றபோது வங்கி சுவரில் துளையிட்டு 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டதும்  ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை பயன்படுத்தி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்நிலையில்  திருச்சி சமயபுரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை போலீசால் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர்  உடைக்கப்பட்ட லாக்கர்களின் எண்கள் விவரம் தெரிவிக்கப்பட்டது. அதில்  114, 299, 300, 39, 323 ஆகிய லாக்கர்களில்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால்  வங்கிக் கிளை முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கியில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.