மறைந்த சுஷாந்த் சிங்கின் "Dil Bechaara" படத்தின் டிரைலர்.!

மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தின் டிரைலர் தற்போது

By ragi | Published: Jul 06, 2020 06:43 PM

மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .டிரைலர் நாளை வெளியிடப்பட உள்ளதாக முகேஷ் சாப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Dil Bechaara' படத்தின் போஸ்டருடன் அறிவித்திருந்தார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும் ,கிஸி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனாவும் நடித்துள்ளனர் . புற்றுநோய் சிகிச்சை பெறும் சஞ்சனாவை காதல் செய்யும் சுஷாந்த் சிங்,ஏ மேஜிக்கல் லவ் ஸ்டோரியான இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் #DilBecharaTrailer என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc