பெண்களுக்கு ஒரு நற்செய்தி…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,032-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது. தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து, தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்யும் பெண்கள் தான் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,032-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,504-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்து இருந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.