தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண்! அழுத குழந்தை,கடுப்பான தாய்!பின்னர் நடந்த விபரீதம்!

தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த போது குழந்தை அழுததால்

By sulai | Published: Jan 21, 2020 07:14 PM

  • தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த போது குழந்தை அழுததால் கடுப்பான தாய் செய்த காரியம்.
  • போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த தாய்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி ஆவார்.இவரது கணவர் மாதேஷ் ஆவார்.இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றன.நந்தினிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நந்தினி கள்ளக்காதலன் வேலைக்கு சென்றவுடன் மற்றொரு கள்ளக்காதலானுடன் இணைந்து மது அருந்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருக்கும் போது குழந்தை நயனாஸ்ரீ தொடர்ந்து அழுது தொந்தரவு செய்துள்ளது.இதனால் கடுப்பான இருவரும் குழந்தை மீதுள்ள ஆத்திரத்தில் மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். பின்னர் பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளனர்.குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது தரையில் சுருண்டு கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் அவர்கள் குழந்தையை எடுத்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது. இதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.அப்போது சிகிச்சை பெற்ற சிறுமி அம்மா அம்மா என்று வலி தாங்கமுடியாமல் முனங்கியது கண்ட அனைவரையும் கண் களங்கச்செய்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய குழந்தையின் தாய் நந்தினியையும் அவரது இரண்டாவது கள்ளக்காதலனையும் தேடிவந்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் தாய் தனது முதல் கள்ளக்காதலனுடன் மருத்துவமனைக்கு வந்து போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்.இந்நிலையில் பெற்ற தாயே தனது குழந்தைக்கு செய்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc