கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தங்கி இருக்கும் வீடுகளில் குளிர் சாதனங்கள் வைத்து வெயிலின் தாக்கததை குறைத்து கொள்கின்றனர்.

இந்நிலையில் அகமாதபத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கூரை வீடுகளில் தரையில் மாட்டுச்சாணத்தை கரைத்து பூசி வெப்பத்தை தணிப்பது போல அகதமாபத்தை சார்ந்த பெண் ஒருவர் காரை குளிர்விப்பதற்காக கூறி மாட்டுச்சாணத்தை கரைத்து காரில் பூசி உள்ளார்.

அந்த புகைப்படத்தை ரூபேஷ் கௌரங்கா தாஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த காரின் உரிமையாளர் செஜல் ஷா என்ற பெண் என கூறியுள்ளார்.

மாட்டுச்சாணத்தை இதுபோல யாரும் சிறப்பாக பயன்படுத்தி நான் பார்த்ததில்லை என ரூபேஷ் பதிவிட்டுள்ளார்.மேலும் செஜல் ஷாவை பலர் கிண்டல் செய்தும், சிலர் பாராட்டியும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here