ஐந்தரை வயது சிறுமி எவரெஸ்ட் அடிவாரத்தை எட்டி சாதனை.!

By

Mount Everest

மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடைந்து ஐந்தரை வயதான சிறுமி சாதனைப் படைத்து உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயதுடைய பிரிஷா லோகேஷ் நிகாஜூ என்ற சிறுமி, உலகின் மிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

Mount Everest
Mount Everest [Image Source : IE TIMES]

தனது தந்தை லோகேஷ் உடன் ப்ரிஷா லுக்லாவில் (நேபாளம்) மே 24 அன்று அவருடன் மலையேற்றத்தைத் தொடங்கி, ஜூன் 1 அன்று இந்தியக் கொடியை பெருமையுடன் பிடித்துக்கொண்டு எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து பின்னர் ஜூன் 4 லுக்லா (நேபாளம்) திரும்பினார். 130 கிமீ தூரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ப்ரிஷாவின் தந்தை லோகேஷ் மற்றும் தாயார் சீமா லோகேஷ் நிகாஜூ, இந்த கடினமான உயரமான மலையேற்றத்திற்கு அவருக்கு பயிற்சி அளித்துள்ளனர். அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5-6 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட மலைகளில் ஏற பிரிஷா திட்டம் வைத்துள்ளாராம்.