38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

சமந்தாவிற்கு கோவில் கட்டிய வெறித்தனமான ரசிகர்.! இன்று நடைபெறுகிறது திறப்பு விழா.!!

நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தீவிர ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு கோவில் கட்டி வருவது சமீபகாலமாக வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆரம்ப காலகட்டத்தில்  குஷ்பு, நமீதா, ஆகியோரின் பெயரில் உள்ள கோவில்கள் தமிழகத்தில் அவர்களது ரசிகர்களால் கட்டப்பட்டுள்ளது.
Samantha Temple
Samantha Temple [Image Source : Filmibeat]
இந்த நிலையில், அவர்களை தொடர்ந்து சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். அதனை தொடர்ந்து சமந்தாவுக்கு இப்போது கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம்பாபட்லா அருகே உள்ள ஆலபாடு கிராமத்தில் வசித்து வரும், தெனாலி சந்தீப என்ற நபர் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஆவார்.
fan built a temple for Samantha
Samantha Temple [Image Source : Filmibeat]
அவரது அளவில்லா பாசத்திற்காக தனது வீட்டின் வாசல் முன்பு, சமந்தாவுக்கு ஒரு ‘கோவில்’ கட்டியுள்ளார்.அந்த ரசிகர் தனது பிறந்தநாளில் சிலையை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், அந்த ரசிகர் தனது நிஜ வாழ்க்கையில் சமந்தாவை ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே இல்லையாம்.
Samantha Temple Built
Samantha Temple [Image Source : News18]
மேலும் சமந்தாவுக்காக அந்த ரசிகர் கட்டியுள்ள கோவிலின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. விரைவில் சமந்தா இந்த ரசிகரை சந்தித்து பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.