, ,

ராமஜெயம் கொலை வழக்கு.! உண்மை கண்டறியும் சோதனை தொடக்கம்.!

By

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. 

திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது

இந்த உண்மை கண்டறியும் சோதனையில் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த உண்மை கண்டறியும் சோதனையானது சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் நடைபெற்று வருகிறது.

Dinasuvadu Media @2023