,

பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி.! டெல்லியில் இன்று 34 கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை.!  

By

Unioin Minister Amit shah - Prime MInister Modi

இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. 

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் கால அளவே உள்ளதால் பிரதான கட்சிகள் தேர்தல் வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 24 எதிர்கட்சிகள் தலைவர்கள் ஒன்றிணைந்து நேற்று மற்றும் இன்று 3 நாள் ஆலோசனை கூட்டத்தை பெங்களூருவில் நடத்துகின்றனர். முதற்கூட்டம் ஏற்கனவே பாட்னாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதேபோல இன்றைக்கு ஆளும் கட்சியான பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்கள் இன்று டெல்லியில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டமானது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற உள்ளது. இதில். பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆந்திராவில் இருந்து ஜனசேனா,  உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல் இந்தியாவெங்கும் பிரதான பாஜக ஆதரவு கட்சிகள் என மொத்தமாக 34 அரசியல் கட்சிகள் இந்த கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ளன. இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.